டாடா(TATA) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தான் டொகோமோ(DOCOMO).மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.அதிரையில் அண்மை காலமாக டொகோமோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் நாம் கேட்கையில் டொகோமோ நிறுவனத்தை மூடப்படுவதாக சொல்கிறார்கள் ஆகவே தான் தொலைபேசி எண்ணை தக்கவைக்கவே மாற்றிக்கொள்கிறோம் என்றனர்.
இதுகுறித்து அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர் TATA நிறுவன அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்கையில் அந்த அதிகாரி கூறியதாவது; இதெல்லாம் பொய்யான செய்தி,தொடர்ந்து வதந்திகள் எங்கள் நிறுவனம் மீது பரப்பப்படுகிறது இதனை யாரும் நம்பவேண்டாம் மேலும் எங்கள் நிறுவனம் தொடர்ந்து தொலைநிறுவன சேவையை வழங்கும் என்றார்.அதிரை கார்டு விற்பனையகத்தில் கேட்கையில், மொத்த விற்பனையாளர் பிரதிநிதி யாரும் இல்லாத காரணத்தால் தான் கார்டுகள் தட்டுப்பாடு நிலவுகிறது என்றனர்.