பள்ளிக்கல்வி துறையில் கடந்த 2012 ஆம் வருடம் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ்
மாணவர்களுக்கு ஓவியம், உடற்கல்வி, கணினி, தையல், இசை மற்றும் வாழ்வியல் திறன் போன்ற
பாடங்களில் மாணவர்கள் திறம்பட விளங்குவதற்கு சிறப்பாசியர்களை புரட்சித்தலைவி
அம்மாவின் அரசு ரூ .5000 தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்களை நியமித்தது
அவர்களில் சுமார் 200 மாற்றுத்திறனாளிகளும் அடங்குவர். பகுதிநேர ஆசிரியர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வி துறை மே மாத ஊதியத்தை 9
ஆண்டுகளாக வழங்காமல் மறுத்து வந்துள்ளது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கடந்த 2011 ஆம் வருடம் 110 விதியின் கீழ் பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க அறிவித்த அறிவிப்பில் 16549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்க அரசுக்கு ஆண்டு ஒன்றிற்கு 99 கோடியே 29 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என்று அறிவித்துள்ளார் இங்கு 99 கோடியே 29 லட்சம் என்பது 12 மாதங்களுக்கு பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ .5000 வீதம் ஊதியம் வழங்க ஒதுக்கப்பட்டுள்ள நிதியாகும்
பகுதிநேர ஆசிரியர்களை நியமிக்க பிறபிக்கப்பட்ட அரசாணை எண் 177 ல் கூட பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியம் கிடையாது என்ற எந்த ஒரு வாசகமும் கிடையாது இப்படியிருக்கையில் எதன் அடிப்படையில் மே மாத ஊதியம் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு கடந்த 2008 ஆம் வருடம் அரசாணை எண் 151யை பிறப்பித்துள்ளது அதில் மாற்றுத்திறனாளிகள் 2 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்தால் பணிநிரந்தரம் செய்யலாம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுகாதார துறையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்த 7 மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் 218 ல் அரசாணை எண் 151 ன் படி பணிநிரந்தரம் செய்துள்ளது அப்படியிருக்கையில் பகுதிநேர
ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளை மட்டும் அரசாணை எண் 151 ன் படி பணிநிரந்தரம் செய்யாமல் பள்ளிக்கல்வி துறை வஞ்சித்து வருவது ஏன் என்பதை மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும்
மாற்றுத்திறனாளிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் தற்போது கொரோனாவால் பல மாற்றுத்திறனாளிகள் தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். எனவே தமிழக அரசு பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரிந்து வரும்
மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி 9 ஆண்டுகளாக பிடித்தம் செய்து வந்து மே மாத ஊதியத்தை உடனே வழங்கி அவர்களை அரசாணை எண் 151 ன் படி பணிநிரந்தரம் செய்து உதவிடுமாறு
தமிழ்நாடு பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் சங்கம் தமிழக கோரிக்கை விடுத்துள்ளது
ஒன்பது ஆண்டுகளாக பிடித்தம் செய்து வரும் தொகையை உடனடியாக விடுவிக்க தமிழ்நாடு பகுதிநேர மாற்றுத்திறன் ஆசிரியர்கள் கோரிக்கை!
50