சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவியுமான சஃபூரா ஜர்கர், கடந்த ஏப்ரல் மாதம் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
கர்ப்பிணி பெண்ணான இவரின் கைதிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன. மாணவி சஃபூரா ஜர்கரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு சமூக செயற்பாட்டாளர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் எந்தவித போராட்ட நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையுடன் மாணவி சஃபூரா ஜர்கருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.