அரசு ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் விலைமதிப்பற்ற சேவையை செய்து வருகின்றனர். சேவையை கௌரவிக்க ஐ.நா. பொதுச்சபை ஜூன் 23ஐ பொதுச்சேவை தினமாக அறிவித்தது.
2003ஆம் ஆண்டிலிருந்து சேவை புரிந்தவர்களுக்கு இத்தினத்தில் விருதுகள் வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது.
இவ்வாண்டு ஐநா பொது சேவை நாளில் உலகெங்கிலும் கோவிட் -19 வைரஸ் தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சை சேவைகளில் பணியாற்றிடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் அர்பணிப்பு மிக்க சேவைகளை நினைத்து போற்றுவோம் என்று ஐக்கியநாடுகள் சபை அறைகூவல் விடுத்துள்ளது.
இதை முன்னிட்டு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக பொதுசேவை தினம் கொண்டாடப்பட்டது.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் பட்டுக்கோட்டை வட்டாச்சியர் திரு.அருள் பிரகாசம்,
அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.பழனிவேல், காவல் ஆய்வாளர் திரு.ஜெயமோகன், வருவாய் ஆய்வாளர்கள் திரு.உமர், திரு.சரவணகுமார், வட்டார மருத்துவ அலுவலர் திரு.ரஞ்சித், மக்கள் நல்வாழ்வுத்துறை வட்டார சுகாதார ஆய்வாளர் திரு.அண்ணாதுரை, அதிரை பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.அன்பரசன், அதிரை கிராம நிர்வாக அலுவலர் திரு.அஜாருதீன் ஆகியோரின் விலைமதிப்பற்ற சேவையை பாராட்டும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் A.ஹாஜா அலாவுதீன், மற்றும் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் Z.முஹம்மது தம்பி ஆகியோர் பொதுசேவை தின நினைவு பரிசு மற்றும் இனிப்பு வழங்கி கவுரவித்தனர்.
இவர்களின் சேவைகள் தொடர பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் பாப்புலர் ஃப்ரண்டின் அதிரை நகர தலைவர் S.முஹம்மது ஜாவித் அவர்களும் உடனிருந்தார்.











