Friday, April 19, 2024

சுயஊரடங்கை அறிவித்த கிராமம் – டாஸ்மாக் கடையையையும் அடைக்க உத்தரவிட்டு நெகிழ வைத்த தஞ்சை கலெக்டர் !

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டிருக்கும் நிலையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக அப்பகுதியினர் தாமாக முன்வந்து சுய ஊரடங்கை அறிவித்து கடைகளை அடைத்தனர். மேலும், அப்பகுதியிலிருந்த டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கலெக்டருக்கு கோரிக்கை வைத்ததையடுத்து, அந்தக் கடையும் மூடப்பட்டது.

தஞ்சாவூரிலில் நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள வல்லுண்டாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், திருப்பூரில் சென்டரிங் வேலை செய்துவந்தார். கொரொனா அறிகுறியுடன் ஊருக்கு வந்த அவர், பக்கத்து கிராமங்களில் உள்ள நண்பர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அத்துடன், சுமார் 20 கிராமங்களுக்கு மையப் பகுதியாகத் திகழும் மருங்குளம் என்ற கிராமத்தின் நால் ரோட்டில் உள்ள கடைகள், மெடிக்கல் ஷாப், டாஸ்மாக் உள்ளிட்டவைகளுக்கும் சென்றுள்ளார்.

இதையடுத்து, அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார். இதனால் வல்லுண்டாம்பட்டு கிராமத்தைச் சுற்றியுள்ள வேங்கராயன்குடிக்காடு, வடக்குபட்டு மருங்குளம் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, மருங்குளம் கிராமத்தினர் 15 நாட்களுக்கு சுய ஊரடங்கை அறிவித்ததுடன், அப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அடைத்தனர். ஆனால், அப்பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டுக்கொண்டிருந்தது. இதனால் பெரும் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தது. `கொரோனா பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த டாஸ்மாக் கடையை அடைக்க வேண்டும்’ என தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவிடம் மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, இன்று டாஸ்மாக் கடையை மூட கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டதுடன், கலெக்டரையும் மனதாரப் பாராட்டினர். இதுகுறித்து, மருங்குளம் கிராமத்து மக்களிடம் பேசினோம். “கொரோனா தொற்றுக்கு ஆளான நபர், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு வந்து சென்றுள்ளார். கடந்த வாரம் குளத்தில் மீன் பிடித்தபோதும் எல்லோருடனும் இருந்துள்ளார்.

அதன்பிறகு, அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வேறு யாரும் கொரோனாவால் பாதிக்கக்கூடாது என்பதற்காக, நாங்களே முன்வந்து கடைகளை அடைத்தோம். ஆனாலும் இங்கு இயங்கி வருகிற டாஸ்மாக் கடைக்கு தினமும் ஆயிரக்கணக்கான குடிமகன்கள் வந்துசென்றனர். இது எங்களுக்கு அச்சத்தை வரவழைத்தது.

உடனே கலெக்டரிடம், `நாங்க கடைகளை அடைத்துவிட்டோம். டாஸ்மாக் கடையை அடைப்பது உங்க கையில்தான் இருக்கிறது’ எனக் கோரிக்கை வைத்தோம்.எங்கள் கோரிக்கையை அக்கறையுடன் கேட்ட கலெக்டர், இன்றிலிருந்து கடைகளை அடைக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, டாஸ்மாக கடை திறக்கப்படவில்லை. இது எங்களுக்கு பெரும் நிம்மதியைத் தந்துள்ளது” என்றனர் உற்சாகத்துடன்.

நன்றி : விகடன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...