Home »  அனாதையாக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அரபுக்கல்லூரிகள்!!

 அனாதையாக்கப்பட்டு வரும் இஸ்லாமிய அரபுக்கல்லூரிகள்!!

by admin
0 comment

இஸ்லாத்தின் அடிப்படை விசயங்களை முஸ்லிம்கள் அனைவரும் ஓரளவு புரிந்து வைத்திருப்பதற்க்கு மூல காரணமாக இருப்பது இஸ்லாமிய அரபு கல்லூரிகள் தான்.

அங்கு சென்று படித்து
(ஸனது எனும் )உலமா பட்டம் பெற்று வெளியில் வரும் ஆலிம்கள் தான் அதற்க்கு மூல காரணம்.

ஆனால் இன்று ஆலிம்களே தனது வாரிசுகளை அரபு கல்லூரிகளில் சேர்த்துவதற்க்கு யோசனை செய்கின்றனர்.

தொழில் கல்வியே படிக்காத சூழலில் இன்று சில உலமாக்கள் வியாபாரம் வணிகம் என்று தனது வாழ்கை வழியை மாற்றி வருகின்றனர்

காரணம் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் அவர்களது வாழ்வில் பொருளாதாரத்தில் அடைந்து வரும் சிக்கல்களும் அதன் மூலம் பெற்று வரும் மன ரீதியான  உளைச்சல்களே இதற்க்கு மூல காரணம்

வாழ்வாதார வழிகள் இல்லாதவர்களுக்கும் வறுமை தாண்டவம் ஆடும் ஏழைகளுக்கும் அனாதை நிலையில் இருக்கும் கீழ் நிலை மக்களுக்கும் தான்

இஸ்லாமிய அரபு கல்லூரிகள் என்பது நமது இந்தியாவில் எழுதப் படாத நடை முறை சட்டமாகவே தனவந்தர்களால் பல்லாண்டு காலம் ஆக்கப் பட்டு விட்டது

சற்று வசதிகளை பெற்று இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் தங்களது பிள்ளைகளை டாக்டருக்கு படிக்க வைக்கவும் கலெக்டருக்கு படிக்க வைக்கவும் அது போன்ற பட்டப் படிப்பை மேற்கொள்ளவும் தான் சபதம் எடுக்கிறார்களே தவிர நானும் எனது பிள்ளையை அரபு கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்து ஆலீமாக உருவாக்கி சமுதாயத்திற்க்கு வழிகாட்டும் முன்னோடிகளாக என் சந்ததிகளை மாற்றுவேன் என்று கனவில் கூட நினைப்பது இல்லை

 

காரணம் தற்கால இஸ்லாமிய கல்லூரிகளில் தனது பிள்ளைகளை படிக்க வைத்தால் அவர்கள் காலம் முழுவதும் மக்களின் உதவிகளையே எதிர் பார்த்து தான் வாழ வேண்டும் என்ற உலமாக்களின் அவலமான நிலையை அன்றாடம் பார்த்து வருகின்றனர்

 

இந்த நிலையை நாம் மறுக்க முடியாது
காரணம் ஆலிம் பட்டம் பெற்ற ஒருவரின் குடும்பத்தில் டாக்டருக்கு படிக்க வைத்தவரையோ அல்லது ஒரு இன்ஜினியருக்கு படிக்க வைத்தவரையோ அவர்களால் பார்க்க முடியவில்லை

 

( ஆனால் ஆலிம் எனும் முறையில் பள்ளியில் பணியாற்றாமல் சுய தொழில் செய்யும் உலமாக்களின் சில பிள்ளைகள் மாத்திரம் தற்போது பட்ட படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்

 

இதில் வேதனை என்னவென்றால் இந்த நிலையை தேர்வு செய்யும் உலமாக்களுக்கும் பொது மக்களை போல் பள்ளிவாசல் மற்றும் தஃவாக்களில் முழு கவனம் செலுத்தும் வாய்ப்பு அமையாது
என்பதையும் பொது மக்கள் உணர வேண்டும்)

 

இதற்க்கு மூல காரணங்கள் என்ன ? இந்த நிலையை மாற்ற செய்ய வேண்டிய முயற்சிகள் என்ன ? என்பதை உலமாக்களின் சபையும் ஜமாத்துகளும் கூட கண்டு கொள்வதில்லை அரபு கல்லூரிகளும் கவனம் எடுப்பது இல்லை

 

இந்த நிலை தொடருமானால் இந்திய அளவில் இயங்கி வரும் பல அரபுக்கல்லூரிகள் பயில்வதற்க்கு ஆள் இல்லாது பூட்டப்பட்டு பள்ளிகளில் பணியாற்றும் உலமாக்களுக்கு பற்றாகுறை ஏற்பட்டு நாளடைவில் மார்க்கம் தெரியாத அல்லது மார்க்கத்தை அரைகுறையாக படித்துள்ள நபர்களின் கட்டுப்பாட்டில் தான் ஜும்ஆ மேடைகளும் இஸ்லாமிய கூட்டங்களும் நடத்தும் சூழல் உருவாகும்

 

இதுவே இஸ்லாத்திற்க்கு சமுதாயம் செய்யும் முதல் துரோகமாகும்

 

+++++++++++++++++++++

அரபுகல்லூரிகள் செய்ய
வேண்டிய மாற்றங்கள்

+++++++

1-இஸ்லாத்தின் அடிப்படைகளை கற்று தருவதோடு அதை படிக்க வரும் மாணவர்களுக்கு அரபு கல்லூரியிலேயே வாழ்கையை நடத்துவதற்க்கு தேவையான தொழில் கல்விகள் பயிற்றுவிக்கப்பட முயற்சிக்க வேண்டும்

 

2- அரபுக்கல்லூரிகளில் பட்டம் பெற்று வெளியில் வரும் ஆலிம்களை அதன் பின் கண்டு கொள்ளாது விட்டு விடும் துரோகத்தை அரபுகல்லூரிகளின் நிர்வாகிகள் கைவிட வேண்டும்

++++++++++++++++++
பள்ளிவாசல் நிர்வாகத்தின்
கடமைகள்
*****************

ஆலிமாக பணியாற்றும் ஒருவர் உங்களை போல் அனைத்து தேவையும் உடையவர் என்பதை மனிதாபிமானத்தோடு உணர்ந்து அவருடைய குடும்ப நிலைக்கு ஏற்ற பொருளியலை திருப்திகரமாக ஏற்பாடு செய்து தர வேண்டும்

 

அல்லது பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சிறு வணிக கடைகளை ஜமாத் மூலமே துவங்கி அதற்க்கு கண்காணிப்பாளராக அல்லது வேலை செய்யும் நபராக ஆலிம்களையே இதர நேரங்களில் நியமித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும்

 

ஒரு ஆலிம் சுயமாக வேலை செய்யும் போது பொதுமக்களால் ஏற்படுத்தப்படும் பித்னாக்கள் விமர்சனங்களை இந்த நிலை நிச்சயம் தடுக்கும்

++++++++++++++++++++ மார்க்கத்தை வியாபாரம் ஆக்குவது ஹராம் என்ற திருமறை குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்களின் தாத்பிரீயத்தை சரியாக புரிந்து கொள்ளாமல்

 

அது தொடர்பான ஆய்வுகளையும் படிக்காமல் இஸ்லாமிய பணிகளுக்காகவே தனது முழு நேரத்தையும் ஒதுக்கி பணியாற்றுபவர்களின் குடும்ப நிலை மற்றும் வாழ்கை வழிகளை யோசிக்காமல்

 

இமாம்கள் சம்பளம் பெறுவது ஹராம் என்றும் அவர்கள் சுயமாக வேலை பார்த்து பள்ளிவாசல் வேலைகளையும் பார்த்து வாழ்கை நடத்தட்டும் என்று சமூக வலைதளங்கள் மற்றும் சில பத்திரிக்கைகளில் ஞானமின்றி விமர்சிக்கும் சிலர்களையும் பார்கிறோம்

 

இந்த வாதங்களை பொறுத்த வரை மேலோட்டமாக பார்க்கும் போது வாதத்திற்க்கு சரியாக தோன்றினாலும் அது போன்ற நிலையில் இன்று பள்ளிவாசல் முறையாக இயங்காது என்பதை அவர்களே அறிந்து கொண்டு தான் வாதிக்கின்றனர்

 

எனவே இந்த வாதங்களை கண்டு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை காரணம்

 

இது போல் பேசும் எவரும் பள்ளிவாசல்களின் பணிகளை சுமப்பதும் இல்லை அவர்களின் சந்ததிகளை அது போல் பணிகளுக்கு விடுவதை விரும்பியதும் இல்லை மாறாக அவர்களின் பிள்ளைகளை உலகியல் கல்லூரிகளின் பக்கம் தான் திருப்பி வைத்துள்ளனர்

 

மேலும் அவர்களின் வாதத்தை ஏற்று ஒரு ஆலிம் முன் வந்தால் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து நிற்பதும் இல்லை

 

இது எல்லாவற்றிக்கும் மேலாக இது போல் பேசும் எவரது அதிகாரங்களிலும் இந்திய அளவில் ஒரே ஒரு பள்ளிவாசல் நிர்வாகமும் மொத்தமாக இருக்கவும் இல்லை

 

ஏட்டளவு சுரைக்காய் ருசிக்கு பயன்படாது என்பதை போலவே இவர்களின் ஒட்டு மொத்த வாதமாகும் இவர்களின் குருட்டு வாதங்களை கேட்டு ஆலிம்கள் அவ்வாறு முடிவு எடுத்தால் இறுதியில் பள்ளிவாசல்களும் அரபுகல்லூரிகளின் நிலைகளை தான் சந்திக்கும்

 

( முழு நேர பணியாக ஆலிம்கள் பள்ளியில் வேலை பார்த்தால் அவர்களுக்கு தரப்படும் ஊதியம் ஹலாலா ?

அல்லது ஹராமா ?

அவ்வாறு ஊதியம் வாங்குவது மார்க்கத்தை விற்பனை செய்வதற்க்கு சமமாகுமா?

 

என்று விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் நாம் ஏற்கனவே கட்டுரையை வெளியிட்டுள்ளோம் ) அதில் நாம் கூறிய மார்க்க ரீதியான ஆதாரங்களை இதுவரை முறையாக நம்மிடம் மறுத்து யாரும் மறு பதில் தரவும் இல்லை

++++++++++++++++++++++
மார்க்கத்தை எடுத்து சொல்வது ஆலிம் பட்டம் வாங்கியவர்கள் மீது தான் கடமை என்பதையும் பள்ளிவாசல்களின் வேலைகளை ஆலிம்களும் முஅத்தின்களும் தான் பார்க்க வேண்டும் என்ற பார்வையையும் மக்கள் மாற்ற வேண்டும்

அல்லது அது போல் பணிகளுக்கு முன் வருபவர்களை அரவணைத்து பழக வேண்டும்

 

+++++++++++++++++++

لِلْفُقَرَآءِ الَّذِيْنَ اُحْصِرُوْا فِىْ سَبِيْلِ اللّٰهِ لَا يَسْتَطِيْعُوْنَ ضَرْبًا فِى الْاَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ اَغْنِيَآءَ مِنَ التَّعَفُّفِ‌ تَعْرِفُهُمْ بِسِيْمٰهُمْ‌ لَا يَسْــٴَــلُوْنَ النَّاسَ اِلْحَــافًا ‌ وَمَا تُنْفِقُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْم

 

ٌபூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான்
(உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும் (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்
அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம்
அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள் (இத்தகையோருக்காக) நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்

(அல்குர்ஆன் : 2:273)

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter