131
திருச்சிக்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ரூபாய் 23.53 கோடி மதிப்பீட்டில் பள்ளி கல்வித்துறை, சட்டத்துறை, பதிவுத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஆகிய துறைகளுக்கான புதிய கட்டிடங்களுக்கான கல்வெட்டு திறந்து வைத்தார். அதன்பின் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுடன் ஆலோசனை ஈடுபட்டார். அதை தொடர்ந்து விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரையும் சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.