Home » பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மத் மறைவிற்கு முன்னால் வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இரங்கல்!!

பன்னூல் ஆசிரியர் அதிரை அஹ்மத் மறைவிற்கு முன்னால் வக்பு வாரியத் தலைவர் ஹைதர் அலி இரங்கல்!!

by admin
0 comment

சின்ன மக்கா என்றழைக்கப்படும் அதிரை நகரம் பல்வேறு உலமாக்களை அதிகமாக உள்ளடக்கியது ஊர் என்றால் மிகையல்ல.

அதிரையில் மார்க்க அறிஞராகவும், அருந்தமிழ் கவிஞராகவும், மொழிப் பெயர்ப்பாளராகவும் பல்வேறு நூல்களுக்கு செயல்வடிவம் கொடுத்த ஆசிரியராகவும் திகழ்ந்த அதிரை அஹ்மத் அவர்கள் நேற்று மறைவுற்றார்.

இந்தச் செய்தி அதிரை மட்டுமல்லாது பல்வேறு ஊர்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமிழக முன்னால் வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் இது குறித்து அளித்த இரங்கல் செய்தியில்,

இஸ்லாத்தை தழுவிய மேலைநாட்டு பெண்கள் குறித்து “பேறு பெற்ற பெண்மணிகள்” உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமை பெற்றிருந்தவர்.

அரபுக் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ் கற்பிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றியவர்.

இறையருட் கவிமணி தமிழ்ப் பேராசிரியர் கா. அப்துல் கபூர் அவர்களின் சிறந்த மாணவராகவ திகழ்ந்தவர்.

தனது முகநூலில் “அதிரை திருந்துமா”என்ற பெயரில் விருப்பு வெறுப்பற்ற தொடரை எழுதி வந்தார்.

கடந்த காலத்தில் அரபுலக வாழ்க்கையின் நினைவுகள் என்னுடன் நிழலாடுகிறது.

காரணம் என்னை பாசமாக தம்பி தம்பி என்றழைப்பர்.

சகோதரர் அதிரை அஹ்மத் அவர்களை வல்ல இறைவன் தன் நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து மறுமையில் உயர்ந்த்க சுவனப்பேறுகளை வாரி வழங்கட்டும் என்ற து ஆக்களோடு அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கும்., உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் இறைவன் சஃப்ருன் ஜெமீலா என்கிற அழகிய பொறுமையை கொடுப்பானாக என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter