Home » மல்லிப்பட்டிணத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!

மல்லிப்பட்டிணத்தில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!

by admin
0 comment

கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட வேண்டும்.  மின் கட்டணங்கள், டோல்கேட் கட்டணங்களை ரத்துசெய்ய வேண்டும். கொரோனா அபாயம் முடியும்வரை பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். மேலும், அனைத்து  கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இன்று (ஜூன்.27) தமிழகம் முழுவதும் சமூக இடைவெளியுடன் கோரிக்கை போராட்டம் நடைபெற்றது.

மல்லிப்பட்டிணத்தில் நடந்த போராட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர தலைவர் அப்துல் பஹத்  தலைமை வகித்தார். நகர செயலாளர் ஜவாஹீர்  முன்னிலை வகித்தார். இதேபோல் மாவட்டத்தின் 5  இடங்களிலும் சமூக இடைவெளியுடன் 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஔரங்கசீப்,நூருல் இஸ்லாம் மற்றும் கட்சியின் செயல்வீரர்கள்  கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter