சீனாவில் டாக்டர் ஆவதற்கான தகுதி தேர்வில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோ அதிக மதிப்பெண்களை வாங்கி அசத்தி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சீனாவின் தொழிநுட்ப நிறுவனம் iFlytek மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த ரோபோ தேர்வில் 456 மதிப்பெண்களை பெற்று உள்ளது.
தேர்வில் தேர்சி மதிப்பெண் 360 ஆகும். சீனாவில் இவ்வருடம் 530,000 பேர் மருத்துவத்திற்கான தகுதி தேர்வை எழுதினர் என அந்நாட்டு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
ரோபோ மாணவர்கள் போன்று தேர்வு எழுதியது போன்று அதனை தீவிரமாக அதிகாரிகள் கண்காணித்தார்கள். மனிதர்கள் போன்றே வழங்கப்பட்ட நேரத்தில் ரோபோவும் தேர்வில் பதிலளித்தது.
இன்டர்நெட் வசதி மற்றும் சமிக்ஞை வசதியில் தொடர்பில் இல்லாமல் ரோபோ தேர்வை எழுதி உள்ளது.
ரோபோ தேர்வு எதுதியதில் எந்தஒரு மோசடியும் நேரிடவில்லை எனவும் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரோபோ தன்னிச்சையாக படிப்பதிலும், பிரச்சனையை தீர்ப்பதிலும் தேர்ந்து உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் வருங்காலங்களில் மருத்துவர்களுக்கு உதவியாக இந்த மருத்துவ ரோபோ பயன்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.