Thursday, March 28, 2024

ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த செல்போன் பயன்படுத்துவதின் தீமைகள் !!(எச்சரிக்கை பதிவு)

Share post:

Date:

- Advertisement -

ஒரு சமூகத்தையே தலைகுனிய வைத்த பெருமை செல்போனுக்கு உண்டு என்றால் மிகையில்லை.  தெருவில் நடந்து போகும் போதும் சரி, வீட்டிலும் சரி, பயணங்களிலும் சரி அவரவர் செல்போனை குனிந்து பார்த்துக் கொண்டே அதில் குறுஞ்செய்திகளையோ வாட்ஸ் அப் விஷயங்களிலோ அல்லது பாடலிலோ அல்லது இணைய தளங்களிலோ உலவி வரும் மனிதர்களாகிவிட்டோம். உடலில் செல் இல்லாமல் கூட இருந்துவிடலாம், ஆனால் செல்போன் இல்லாமல் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

விழித்திருக்கும் போது எப்போதும் உடன் இருக்கும் இந்தக் கருவி, உறங்கும் வரையில் கண் பார்வைக்குள் இருந்து கொண்டிருக்கும். உறக்கத்தின் கடைசி கணம் வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பலர் அதனை தலையணைக்குக் கீழே வைத்துவிட்டு தூங்குவார்கள். இதனால் கண்கள் பாதிப்படைகிறது. அதிக சிரமம் எடுத்து பார்ப்பதால் கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படலாம். இப்படி ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரத்திலும் நம்முடன் வசிக்கும் இந்தக் கருவியால் நன்மை தீமை என்பதையெல்லாம் தாண்டி உடல் நலத்துக்கு அது எத்தகைய ஊறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நம்மில் பலர் மறந்துவிடுகிறோம்.

செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு மிகவும் ஆபத்தானது. செல்போன் கதிர்வீச்சினால் மூளையில் க்ளியோமஸ், அகெள்ஸ்டிக் நியூரோமஸ் என இரண்டு வகைப் புற்றுநோய் கட்டிகள் உருவாகக் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கதிர்வீச்சு பாதிப்புக்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

தினமும் நீங்கள் எத்தனை மணி நேரம் செல்போனை கையில் வைத்திருக்கிறீர்கள் என்பதை கவனிக்கத் தொடங்குங்கள். கர்ணனின் கவசகுண்டலம் போல எப்போதும் செல்போனை காதில் வைத்துக் கொண்டிருந்தால் விரைவில் கதிர்வீச்சுப் பாதிப்புக்களால் காது, கண், மற்றும் மூளை பாதிப்புக்கள் ஏற்படும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

◆தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து செல்போனை பயன்படுத்த வேண்டாம்.

◆சிக்னல் குறைவாக இருக்கும் சமயங்களில் செல்போனை பயன்படுத்த வேண்டாம். காரணம் அச்சமயங்களில் செல்போனிலிருந்து அதிகளவு கதிர்வீச்சு வெளிப்படும்.

◆பயணங்களின் போது செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஹெட் போன் அல்லது ப்ளூ டூத்தில் பேசுங்கள்.

◆செல்போனில் நேரடியாக அதிக நேரம் பேசுவதை விட ஹெட் போனில் பேசுவது கதிர்வீச்சுப் பாதிப்புக்களைக் குறைக்கும்.

◆செல்போனில் அடிக்கடி பேசும் சூழல் இருந்தால் உங்கள் அறையில் அல்லது நீங்கள் தனியாக இருக்கும் சமயங்களில் ஸ்பீக்கர் ஃபோனில் பேசலாம். காதில் வைத்து அடிக்கடி பேசும் போது கதிர்வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்க எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது ஸ்பீக்கர் மோடில் பேசுங்கள். குறுஞ்செய்தியில் ஒரு தகவலைச் சொல்லிவிட முடியுமென்றால் அதை பயன்படுத்துங்கள்.

◆காலை எழுந்தது முதல் இரவு படுக்கப் போகும் வரை சிலர் ஹெட்ஃபோனை காதில் மாட்டிக் கொண்டு வலம் வருகிறார்கள். இதனால் சப்தமானது நேரடியாக மூளைக்குள் செல்வதால் நாளாவட்டத்தில் செவித்திறன் பாதிப்படைவதுடன் மூளைச் செயல்திறன் குறையும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

◆சிலர் தூங்கும் வரை செல்போனை அருகில் வைத்திருப்பார்கள், அல்லது ஹெட்போனை காதில் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டே தூங்குவார்கள். இவை இரண்டும் தவறான பழக்கம். செல்போனை உங்கள் படுக்கையிலிருந்து சற்று தொலைவில் வைத்துவிட்டு தூங்க வேண்டும். ஹெட்ஃபோனை தேவைப்படும் போது மட்டும் உபயோகிக்க வேண்டும்.

◆குழந்தைகளுக்கு செல்போன் மிகப் பெரிய ஈர்ப்பு. என் குழந்தை நல்லா பேசுவான் என்று செல்போனை நீங்களே அவர்களுக்கு பழக்கப்படுத்தாதீர்கள். குழந்தைகளிடம் செல்போனில் பேசாதீர்கள், அதை ஒரு விளையாட்டுப் பொருளாகக் கருதி அவர்களிடம் கொடுக்கக் கூடாது. குழந்தைகள் மென்மையானவர்கள், அவர்கள் உடல் வளர்ச்சிப் பருவத்தில் இருப்பதால் கதிர்வீச்சின் தாக்கம் அவர்களை எளிதில் பாதிக்கக் கூடும். எனவே கூடுமானவரையில் குழந்தைகளை செல்போனுக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.

◆செல்போனில் அடிக்கடி பேசும் நபராக நீங்கள் இருந்தால் கூடுமானவரை இடது பக்க காதில் வைத்துப் பேசுங்கள் காரணம் வலது பக்கத்தில் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஆண்கள் சட்டைப்  பாக்கெட்டில் செல்போனை வைக்கவேண்டாம். காரணம் இடது பக்கம் சட்டைப் பாக்கெட் இருப்பதால், கதிர்வீச்சு இதயத்தை பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

◆செல்போனை செல்போனை பேச மட்டும் பயன்படுத்துங்கள். வீட்டில் அல்லது அலுவலகத்தில் லேண்ட் லைன் இருந்தால் அதில் பேசும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். செல்போனில் படம் பார்ப்பது, விளையாடுவது என்று நீண்ட நேரம் செலவிட வேண்டாம். அது உங்களை கவனக் குறைவு பிரச்னைகளுக்கு இழுத்துச் செல்வதுடன் கண்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

◆செல்போனை கைகள் முழுவதும் படும்படி பிடிக்க வேண்டாம். காரணம் கதிர்வீச்சு முழுவதும் கைகளில் படும். மாறாக செல்ஃபோனின் அடிப்பகுதியை பற்றியபடி படத்தில் காண்பிக்கபடுவது போன்று பிடித்துப் பேசுவதால் கதிர்வீச்சு உடலுக்குள் அதிகம் படுவதைத் தவிர்க்கலாம்.

 

◆செல்போன் வாங்கியவுடன் அதன் பாதுகாப்பும் பயன்பாட்டு முறைகளையும் அதனுடன் இருக்கும் புத்தகத்தை ஒரு முறை முழுவதும் படித்து தெரிந்து கொள்ளுங்கள். Do’s and Dont’s என்பது எல்லா எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் பொருந்தும். செல்போன் போன்ற சாதனங்களை அன்றாடம் நாம் அதிகப்படியாக பயன்படுத்துகையில் கதிர்வீச்சுப் பிரச்னைகள் தவிர வேறு பல பாதிப்புக்களும் ஏற்படலாம். எனவே கவனத்துடன் அதைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...