Home » ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை..!! ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து நோயாளி சாவு..!

ரூ.4,000 கொடுக்காத நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை..!! ஊழியர்களின் தாக்குதலில் துடிதுடித்து நோயாளி சாவு..!

0 comment

உத்திரபிரதேச மாநிலம், குவார்சி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுல்தான்கான் என்பவர் கடுமையான வயிற்று வலியால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்ய வேண்டும், அதற்கு ரூ.4,000 கட்டணம் என மருத்துவமனை கூறியது. அவ்வளவு பணம் தங்களிடம் இல்லை என கூறி வயிற்று வலிக்கான மருந்து, மாத்திரைகள் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டது. இதற்கான தொகையை சுல்தான் குடும்பத்தினர் செலுத்தினர்.

ஆனால், அல்ட்ரா சவுண்ட் பரிசோதனைக்கு பதிவு செய்து விட்டதால், அதற்கான அனுமதி கட்டணம் ரூ.4,000 செலுத்தியே ஆக வேண்டும் என மருத்துவ ஊழியர்கள் கூறினார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சுல்தான் குடும்பத்தினர் சிகிச்சை வேண்டாம் என அங்கிருந்து வெளியேற முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் சுல்தானை தடியால் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சுல்தான், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி ஆதாரத்துடன் மருத்துவ ஊழியர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter