தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை பூர்விகமாக கொண்ட அப்துல் அஜீஸ் அவர்களின் மூத்த மகன் அப்துல் நௌஃபல் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பணி செய்து வருகிறார்.
தமிழ் மீது தீராத பற்றுதல்,காதலும் கொண்ட நௌஃபல் பல்வேறு தலைப்புகளில் கவிதைகளை எழுதி குவித்து இருக்கிறார்.பத்திரிக்கை,வானொலி இப்படி பன்முக திறமைகளை வெளிப்படுத்தி மலேசிய வாழ் தமிழர்களுக்கு நன்கு அறிமுகமான ஓர் கவிஞர்.
இவரின் படைப்புகளுக்கும்,கவிதைகளையும் கௌரவிக்கும் வண்ணமாக மலேசிய நாட்டில் பல்வேறு விருதுகளையும்,பட்டங்களையும் பெற்று இருக்கிறார்,மலேசிய தமிழ்ச்சங்கங்கள் மூலமாக கௌரவம் படுத்தப்பட்டும் இருக்கிறார்.மேலும் மலேசிய தமிழ் சமூகத்திற்கிடையே பிணைப்பை ஏற்படுத்தும் பணியையும் மேற்கொண்டு வருகிறார்.
இப்படி தமிழுக்கு பெருமை சேர்க்கும் பணியில் மலேசிய தமிழர் நௌபல் சேவை செய்து வருகிறார்.அவரின் இத்தகைய பணியை போற்றும் விதமாக அதிரை எக்ஸ்பிரஸ் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர் அண்மையில் கொடுத்த மலேசிய நாளுதழுக்கு கொடுத்த பேட்டி இணைக்கப்பட்டுள்ளது.
