தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா உதவித்தொகை வழங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுருந்தார்.
அதன்படி சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா ஜின்னா வழங்கினர்.