அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் 2020-21 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா அதிராம்பட்டினம் ராயல் மஹாலில் இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn. T. முகமது நவாஸ்கான் தலைமை வகித்தார்.
2020-21ம் ஆண்டிற்கான புதிய தலைவராக Rtn. S. சாகுல் ஹமீது,
செயலாளராக Rtn. A. ஜமால் முகமது, பொருளாளராக Rtn. Epms. J. நவாஸ்கான் ஆகியோர்களுக்கு மாவட்ட துணை ஆளுநர்
Rtn.Mphf. G. மனோகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தும், புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்தும் சிறப்புரை ஆற்றினார்.
முத்துப்பேட்டை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் Rtn.Mphf. மெட்ரோ மாலிக் வாழ்த்துரை வழங்கினார். முன்னதாக அதிரை-பட்டுக்கோட்டை சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் Rtn.phf.AM. வெங்கடேசன், Rtn.M.K. முகமது சம்சுதீன்,
முன்னாள் செயளாலர் Rtn.Z. அகமது மன்சூர், முன்னாள் பொருளாளர் Rtn. R. பிரபு, உறுப்பினர்கள் Rtn.M.மன்சூர் (USA),
Rtn.சேக் அப்துல்லாஹ், Rtn.முகைதீன் அப்துல் காதர்,
Rtn.இப்ராகிம், Rtn.G.நூருல் ஹசன்,
Rtn.ரியாஸ் அஹமது, Rtn.A.அகமது தம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும்
மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
தமிழக அரசு வழங்கி உள்ள அறிவுறுத்தலின் படி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் முகக்கவசம் கொடுக்கப்பட்டு,கிருமி நாசினி கைகளில் தெளிக்கப்பட்டு,சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மிக குறைவான உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்றது.