Thursday, April 18, 2024

இன்றைய சிந்தனை துளிகள்!!

Share post:

Date:

- Advertisement -

முதலில் நாம் திருந்த வேண்டும்

நம்மிடம் உள்ள ஆயிரம் குறைகளை மறைத்து விட்டு மற்றவர்களை திருத்த வேண்டும் என்று எண்ணினால் அங்கே மோதல்கள் தான் உண்டாகும்.முதலில் நாம் திருந்த வேண்டும். பிறகு மற்றவர்களை திருத்த முற்படுவோம்..     ஒரு நாட்டில் ஒரு மன்னன் இருந்தான்.
அவனுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது.
பல ஊர்களிலிருந்து மிகப்பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை…

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு அறிஞர் வந்தார், அவருக்கு மருத்துவமும் பார்க்கத் தெரியும்..

அவர் மன்னரை சோதித்துவிட்டு அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்கு, கண்களில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார்…

அந்தக் கண்களை குணப்படுத்த ஒரேயொரு வழிதான்.
அந்த அரசன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் காணக்கூடாது என்று கூறிவிட்டுச் சென்றார்…

அரசன் முதலில் தன் வீட்டில் இருக்கும் அனைத்தையும் பச்சையாக மாற்றினான், தலைவலி குணமாகிவிட்டது. அந்த அறிஞர் கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டை விட்டு வெளியே போகத் தொடங்கினான்…

வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே…!

நிறையப் பச்சை நிறப் பூச்சுகளையும் தூரிகைகளையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான்…

அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை. அவர்களும் மன்னர் கூறியவாறே செய்து வந்தார்கள்…

சில மாதம் கழித்து மீண்டும் அந்த அறிஞர் அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை நிறம் பூசுவதற்காகப் போனார்கள்…

அவருக்கு வியப்பாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் ‘தங்கள் அரசனின் கட்டளை இது’ என்று கூறினார்கள், அறிஞர் அதற்கு, “என்னை உங்கள் மன்னரிடம் அழைத்துச் செல்லுங்கள்” என்றார்…

மன்னருக்கு தன் நோயினை குணப்படுத்தியவர் மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை வரவேற்று விருந்தோம்பினான்…

“இந்த ஊரில் அனைத்திற்கும் ஏன் பச்சை நிறம் அடிக்கிறீர்கள்…?” என்று அவர் கேட்டார்.

“அய்யா, நீங்கள் கூறியதைத்தான் நான் செய்கிறேன்” என்றான் அவன் மிகப் பணிவோடு…

“நான் என்ன சொன்னேன்…?” என்றார் அவர்…

“பச்சை நிறத்தை விடுத்து வேறெவற்றையும் நான் காணக்கூடாது என்று கூறினீர்களே அய்யா” என்றான்.

அரசே…! நீங்கள் அதற்கு இவ்வளவு பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம், ஒரு பச்சை நிறக் கண்ணாடி வாங்கி அணிந்திருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்குமே…!, உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சை நிறம் பூசவியலுமா…?” என்று கேட்டார் அந்த அறிஞர்…
.
நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் அரசனைப் போலத்தான் பலரும் இன்னும் இப்படித்தான் இருக்கின்றார்கள்

ஆம் நண்பர்களே…!

உலகில் உள்ளவர்களை திருத்த வேண்டுமானால் முதலில் நாம் திருந்த வேண்டும்…

மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து துவங்க வேண்டும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...