சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மல்லிப்பட்டிணத்தில் சேதமடைந்து இருந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின்கம்பங்களை மின்சார வாரியம் மூலமாக மாற்றப்பட்டது.
கஜா புயலில் சேதமடைந்த மின்கம்பங்களை உடனடியாக மாற்றி தரவேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து மின்சார வாரியத்திற்கு புகார் அளிக்கப்பபட்டது இருந்தது, மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவிலும்,ஊராட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பபட்டது.
இந்நிலையில் இன்று(ஜூலை.13) சேதமடைந்து இருந்த கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் ஊண்டப்பட்டது.
இதுகுறித்து ஏற்கனவே அதிரை எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.