Home » அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பின் மனிதநேய பணி..!

அதிராம்பட்டினத்தில் CBD அமைப்பின் மனிதநேய பணி..!

0 comment

 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே இன்று(20/11/2017) இரவு சுமார் 9:00மணியளவில் 65வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உயிருக்கு போராடி போராடிக்கொண்டு இருப்பதாக. சமூக ஆர்வலர் பைசல் அவர்கள் கிரசென்ட இரத்த சேவை மையத்திற்கு(CBD-தன்னார்வல தொண்டு நிறுவனம்) தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து , CBDன் தஞ்சை மாவட்ட தலைவர் பேரா. செய்யது அகமது கபீர் அவர்களது தலைமையில், CBDன் தஞ்சை மாவட்ட துணை தலைவர் அக்லன் கலீஃபா (அதிரை கலீஃபா), CBDன் முக்கிய உறுப்பினர்களான அப்ரித் கான் , சாகுல் ஹமீது மற்றும் யூசுப் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன்படி கிடைத்த தகவல் உண்மையானது என்பதால் அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்திற்கு 108ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு. அம்முத்தியவரின் உயிரை காப்பாற்ற விரைவாக கொண்டு சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அந்த முதியவர் சுமார் நான்கு நாட்களாக சாப்பிடாமல் ,தண்ணீர் அருந்தாமல் உடல்நல குறைவால் நோய்வாய்ப்பட்டு கிடைத்ததாக அப்பகுதினர் தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே, அம்முதியவரை நாளை காலை(21/11/2017) அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளித்து CBD அமைப்பு சார்பில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.

CBD அமைப்பு சார்பில் தஞ்சை மாவட்ட மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இரத்ததானம் போன்ற மருத்துவ உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter