நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர் இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொது மக்கள் ஆர்வத்துடன் கேட்டு வாங்கியது , வீட்டில் உள்ளவர்களுக்கும் சிறு சிறு பாத்திரங்களில் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றது .
2500 க்கு மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த வெள்ளிக்கிழமை (24:7:20 ) அன்றும்,அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை (31:07:20) அன்றும் கப சுர குடிநீர் வழங்கப்படும் .
அனைவரும் அவசியம் மாஸ்க் அணியுங்கள். சமூக இடைவெளியை பின்பற்றுங்கள். வெளியில் செல்வதை தவிர்த்து கொள்ளுங்கள். வரும் முன் காப்போம்.