பேராவூரணி, ஜூலை.18-
பேராவூரணியில் அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூலை 20 ந்தேதி திங்கள்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஹோட்டல்கள் இரவு 8.00 மணி வரை பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும்,கடைகளுக்கு முன்பு சானிடைசர் அல்லது சோப்பு மூலம் கைகளை கழுவிய பின்னரே பொதுமக்களை பொருள் வாங்க அனுமதிக்க வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வலியுறத்த வேண்டும். கட்டாயம் முக கவசம் ,கையுறை அணிந்து பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.பால் மற்றும் மருந்து கடை வழக்கம் போல் செயல்படும் எனவும் நகர வர்த்தகர் கழகத்தின் சார்பில் அறிவித்துள்ளனர்.இது குறித்து நகர வர்த்தகர் கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் கூறியதாவது: பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் முழு அடைப்பு நடைபெற்று வருகிறது. நமது நகரத்தில் வர்த்தகர்கள், பொதுமக்கள் நலன் கருதி இந்த நேரக் கட்டுப்பாடு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அனைத்து வர்த்தகர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
பேராவூரணியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேரக்கட்டுப்பாடு வர்த்தகர் கழகம் அறிவிப்பு!
163
previous post