தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் ஒரு வாரம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரக்கூடிய நிலையில் மாவட்டத்தின் பல ஊர்களில் வியாபாரிகள், வணிகர்கள் தாமாக முன்வந்து கடைகள் அடைத்தும்,கடை திறப்பு நேரத்தை குறைத்தும் பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு சங்க மீனவர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் வரும் ஜூலை 26ம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் செல்ல கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது.மேலும் வரக்கூடிய நாட்களில் தொழிலுக்கு போனாலும் முக கவசம்,சமூக இடைவெளி அவசியம் என்பதையும் வலியுறுத்தி பேசப்பட்டது.
இக்கூட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மல்லிப்பட்டிணம் சங்க நிர்வாகிகள் சந்திர சேகர்,வடுகநாதன்,கள்ளிவயல் தோட்டம் நிர்வாகிகள் AK.தாஜுதீன், அப்துர் ரஹ்மான்,செய்யது முகமது ஆகியோர் கலந்துக்கொண்டனர்.