தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், கல்லிவயல் தோட்டம் விசைப்படகு, நாட்டுப்படகு, மீனவர் சங்க ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை.26) காலை 11 மணி அளவில் துறைமுக ஏலக் கூட வளாகத்தில் மீனவர் பேரவை பொதுச்செயலாளர் தாஜூதீன் தலைமையிலும் வடுகநாதன்,கள்ளிவயல் தோட்டம் செயலாளர் இபுராஹீம், சந்திரசேகர்,நீலகண்டன் நாட்டுப்படகு சங்க நிர்வாகிகள் செய்யதுமுகமது,அப்துல்ரகுமான், ரகுமத்துல்லா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் சேதுபாவாசத்திரம் காவல்துறை ஆய்வாளர் அண்ணாதுரை,மற்றும்கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொரோனா வைரஸ் தொற்று தஞ்சை மாவட்டத்தில் அதிகமாக பரவி வருவதால் மீன் ஏலம் விடும் இடங்களில் சமூக இடைவெளியுடன் மீன் விற்பனை செய்ய வேண்டும். தனிமனித இடைவெளி மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும். கள்ளிவயல் தோட்டப் பகுதியில் உள்ள நாட்டுப் படகு மற்றும் விசைப்படகுகள் துறைமுக வடக்குப் பகுதியிலும் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெரு நாட்டுப்படகு, விசைப்படகுகள் துறைமுக தெற்கு பகுதியிலும் காலை 6 மணிக்கு மேல் மீன் விற்கவேண்டும். வெளியூர் மீன்களை யாரும் கொண்டுவந்து விற்கக்கூடாது.மீறிவிற்பவர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் மீறுபவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை துறைமுகத்தை விட்டு வெளியேற்றுவது எனவும் படகுகள் நாளை(ஜூலை.27) திங்கள் முதல் தொழிலுக்கு செல்வது எனவும் பேசி முடிக்கப்பட்டு உள்ளது.