உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 450 ஆண்டுகால பழைமை வாய்ந்த பள்ளி கரசேவகர்களால் 1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி இடிக்கப்பட்டது.
இதன் பின்னர் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து இறுதியாக அலகாபாத் உயர்நீதிமன்றம் 2.77 ஏக்கர் நிலத்தை 3 பங்குகளாக பிரித்துக் கொள்ள ஆணையிட்டது.
இஸ்லாமிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் பலனளிக்கவில்லை. இதனையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக இன்று (05.08.2020) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
பாபர் மஸ்ஜித் இடித்தவர்களை நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று அதிரை நகர தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அதிரை பேரூந்து நிலையத்தில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமை தாங்க, நகர செயற்குழு உறுப்பினர் நசுருத்தீன்,மதுக்கூர் ஜபருல்லாஹ், ஆஷிக், A.J.ஜியாவுதீன் ஆகியோர் கண்டன கோஷங்களை முழங்கினர்.
அதிரை நகர தமுமுக முன்னாள் நகரத் தலைவர் (சாந்தா) சாகுல் ஹமீது மற்றும் அன்வர் அவர்கள் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக அதிரை தமுமுக நகர செயலாளர் ஷேக் தாவூத் நன்றியுரை கூறினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.




