தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக பாபரி மஸ்ஜித் இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்து,காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கு,முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெறு,பொருளாதார பேரழிவை கொரானாவால் மறைக்காத உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் அறவழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி .MBA தலைமை வகித்தார் . ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் . SDPI கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் முகமது ரஹீஷ், முஹம்மது அஸ்கர், மாவட்ட பொருளாளர் இத்ரீஸ்கான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தஞ்சை தெற்கு மற்றும் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த தலைவர் A. ஹாஜா அலாவுதீன் அவர்கள் முன்னிலை வகித்தனர். மற்றும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் N. சபியா கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து நகர மற்றும் கிளை நிர்வாகிகள் செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் SDPI கட்சியின் பெண்கள் அணியினர் கலந்து கொண்டனர். நான்கு அம்சக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் எழுச்சிமிகு கண்டன கோஷங்கள் உடன் நடைபெற்றது.
SDPI கட்சியின் நகர இணைச் செயலாளர் C.அஹமது.MSC அவர்களின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது.ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்துக்கொண்டனர்