இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் உடல்நலம் குன்றிய நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்ததை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து விரைவில் குணமடைந்து சமூதாய பணி ஆற்றிட வேண்டும் என வாழ்த்தி பல்வேறு கட்சி தலைவர்கள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அதன்படி நாடெங்கும் முஸ்லீம் லீக் தொண்டர்கள் சிறப்பு பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.
இன்று அதிராம்பட்டினம் நகர கிளை சார்பாக நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், நகர முஸ்லீம் லீக் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் முனாஃப், மாவட்ட ஊடக அணி செயலாளர் ஷாகுல் ஹமீது, மாவட்ட பிரதி நிதி ஜமால் முஹம்மது உள்ளிட்ட நகர கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதில் ஆலீம்,ஹாபீழ் முஹம்மது முஹைதீன் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பிரார்த்தனையில் ஈடுபட்டது வந்திருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.
