Home » புதிய கண்டுபிடிப்பால் அரசுக்கே பாடம் நடத்தி அசர வைத்த தமிழக மாணவர்கள்!

புதிய கண்டுபிடிப்பால் அரசுக்கே பாடம் நடத்தி அசர வைத்த தமிழக மாணவர்கள்!

by
0 comment

விண்ணில் ராக்கெட் ஏவி சாட்டிலைட்டை நிறுவி விட்டால் வல்லரசு ஆகி விடலாம் என்ற மனப்பான்மையை தமிழக மாணவ கண்மணிகள் உடைத்திருக்கின்றனர்.

உலக அரங்கில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இவ்வருடத்தின் முக்கிய சம்பவம் எதுவென்றால் அது, எண்ணூர் துறைமுகத்தில் கப்பல் விபத்தினால் கச்சா எண்ணெயை மாணவர்கள், கையினால் அள்ளியதுதான்.

சமூக வலைத்தளங்கள் மீம்ஸ்கள் போட்டு அரசை வறுத்து எடுத்துக் கொண்டிருந்த வேளையில், வாளிகளைக் கையில் ஏந்தி எண்ணெயை அள்ளும் துயரக் காட்சியைக் கண்டு மனம் வெம்பிய மூன்று தமிழக மாணவர்கள் முத்து ஐஸ்வர்யா, சாகித்ய நிருபன், கோமதி வேறு மாதிரி சிந்தித்தனர்.

மதுரை மாவட்டம் வீரபாஞ்சான் பகுதியில் பத்தாம் வகுப்பு படிக்கும் இவர்கள், “ஆயில் சேவர்” என்ற இயந்திரத்தை வடிவமைத்து IIT கான்பூரில் தேசிய அளவிலான போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளனர். Infrared sensor உதவிகொண்டு, அடர்த்தியான எண்ணெயை மட்டும் நீரிலிருந்து உறிஞ்சி சேமித்துக் கொண்டு கரை திரும்பும் “ஆயில் சேவர்” இயந்திரம் நம்மை அசர வைக்கிறது. நெஞ்சை நிமிர வைக்கிறது.

டிஜிட்டல் இந்தியா, க்ளீன் இந்தியா, கிரீன் இந்தியா என்று வசவச-வென்று புல்லரிக்கும் பெயர்கள் மட்டுமே உள்ளனவே தவிர, மனிதனே கையினால் பிறர் மலம் அள்ளும் நிலையும், கழிப்பறைகளே இல்லாத ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களும் தான் நிஜ இந்தியா.

மாணவர்களின் இந்த உத்வேகத்தை உணர்ந்து, அடிமட்டத்திலிருந்து மேலே உயர்வது தான் வளர்ச்சி என்பதை செயலில் காட்ட அரசுகள் முன் வர வேண்டும்.

நன்றி:இந்நேரம்

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter