தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று 5 அம்ச கண்டன கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் தேவராஜ் தாங்கினார். பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் தம்பி நெல்சன் பிரபாகர் மற்றும் அதிரை நகர செயலாளர் ஜஹபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி மாநில ஒரு ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் கபீர், மாநில பேச்சாளர் தஞ்சை கரிகாலன், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் கந்தசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
புதிய கல்வி கொள்கையை திரும்ப பெற வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையான EIA 2020 வரைவை ரத்து செய்ய வேண்டும், ரயில்வே துறையில் வடமாநிலத்தவருக்கு வழங்கிய பணி ஆணையை ரத்து செய்து தமிழர்களுக்கே திரும்ப அளிக்க வேண்டும், பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்து வரும் ஈ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும், கொரோனா அல்லாத பிற நோயாளிகளுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் எளிதாக மருத்துவம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது.
இதில் அதிரை நகர நாம் தமிழர் கட்சியின் மொய்னுதீன், ராஜிக் அகமது, ஜியாவுதீன், சைபுதீன், இபுராஹீம் மௌலானா, மர்ஜூக், நசீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.














