81
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் தேசிய மனித உரிமை கவுன்சில் ஆஃப் இந்தியாவின் ஆலோசனை கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசன் முகைதீன் தலைமை வகித்தார்,மாவட்ட துணைத்தலைவர் அயூப் கான்,மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் ஹமீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை முன்னேற்றம் அடைய பிரார்த்தனை செய்தனர்.மேலும் மாவட்ட செயல்வீரர்களாக முத்துவேல்,பாலமுருகன் ஆகியோரும் மாவட்ட துணை தலைவராக சுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டு ஆணை வழங்கினார்.இக்கூட்டத் தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி,மாவட்ட உறுப்பினர் ரபீக் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்துக்கொண்டனர்.