Home » தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை ரத்து !

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை ரத்து !

by Asif
0 comment

தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் பல்வேறு நகரங்களிடையான 7 சிறப்பு ரயில்கள் ஆகஸ்டு 31 வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

கொரோனா பரவலைத் தடுக்கச் சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்த வேண்டும் எனத் தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இதனால் ஆகஸ்டு 15 வரை இந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் தமிழக அரசு கேட்டுக்கொண்டதால் ஆகஸ்டு 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்தோருக்கு முழுத் தொகையும் திருப்பிச் செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.

கவுன்டரில் பயணச்சீட்டு எடுத்தவர்கள் பயண நாளில் இருந்து 6 மாதம் வரை திருப்பிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் – புதுடெல்லி இடையிலான ராஜதானி சிறப்பு ரயில் தொடர்ந்து இயங்கும் எனக் குறிப்பிட்டுள்ளது. 

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter