தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பாக சுதந்திர தின கொடியேற்று விழா நடைபெற்றது.
தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் A. கமால் பாட்சா தலைமை வகித்தார். வட்டார தலைவர் ஷேக் இபுராகிம் ஷா முன்னிலையில் கமிட்டியின் தலைவர் KMM. அப்துல் ஜப்பார் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் இரண்டாம் புலிக்காடு ராமகிருஷ்ணன்,பேராவூரணி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தொகுதி செயலாளர் A. நூருல் அமீன், கமிட்டி செயலாளர் முகமது காசிம்,சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் நாகூர் கனி, காதர் சாஹிப் அப்துல் சுகுது அப்துல் அஜீஸ், கே.வடுகநாதன் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

