அதிராம்பட்டினத்தில் பீச் சோசியல் ஃபோரம்(BSF) சார்பில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை இரண்டு இடங்களில் நடைபெற்றது.
அதிராம்பட்டினம் இந்தியன் வங்கி மற்றும் தீன் ஆட்டோ ஸ்பேர்ஸ் என இரண்டு இடங்களில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முகக்கவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வும் செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பீச் சோஷியல் ஃபோரம் அமைப்பினர் செய்திருந்தனர். இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையின் உதவி மருத்துவ அலுவலர் Dr. E. அருண்குமார் B.S.M.S., M.D, மற்றும் Dr. V.P. அருண் பிரதாப் B.H.M.S ஆகியோர் கலந்துகொண்டு கபசுர குடிநீர், முககவசங்கள் மற்றும் ஆர்செனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.







