SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் மல்லிப்பட்டிணத்தில் கட்சியின் அலுவலகத்தில் இன்று(24.8.2020) நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் N.முகமது புகாரி கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.மாவட்ட பொதுச்செயலாளர் S.சாகுல்ஹமீத்
முன்னிலை வகித்தார்.
புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்,சுற்றுச்சூழல் வரைவு மதிப்பீடு அறிக்கையை கைவிடு,கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தம் செய்வதை கைவிடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் SDPI கட்சி முன்னெடுக்கும் பிரச்சாரம் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் உறுப்பினர் சேர்க்கை,சுதந்திர தினத்தில் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள்,சமூக ஊடக அணியை மேம்படுத்துதல் குறித்தான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்து நகர,கிளை பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம்,நோட்டீஸ் வினியோகம், ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.