தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25 ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி ஓட்டு மொத்த தமிழகத்திலும் தமுமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தெற்கு தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா தலைமையில் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.
இந்த 25 ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தமுமுக அதிரை கிளை அலுவலகத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளார் மதுக்கூர் ஜபருல்லாஹ், ஷிஃபா மருத்துவமனை அருகில் தமுமுக நகர செயல்வீரரும் நகர செயற்குழு உறுப்பினருமான நஸ்ருதீன், சேர்மன் வாடி அருகில் நகர செயல்வீரரும் நகர செயற்குழு உறுப்பினருமான மீரான், பிலால் நகர் இரயில்வே கேட் அருகில் நகர செயல்வீரரும் நகர செயற்குழு உறுப்பினருமான சுல்தான், அதிரை தக்வா பள்ளிவாசல் அருகில் நகர வர்த்தக அணி செயலாளர் இஸ்மாயில், அதிரை பேரூந்து நிலையம் அருகே மாநில துணைச் செயலாளர் S.அஹமது ஹாஜா ஆகியோர் 6 இடங்களில் கொடியேற்றி சிறப்பித்தனர்.
இவ்வெள்ளி விழாவில் 100 ஏழை குடும்பங்களுக்கும், ராமகிருஷ்ணா ஆதரவற்றோர் கப்பகத்திலும் மதிய உணவுகளும், 2 ஏழை ஆண் குழந்தைகளுக்கு ஹத்னா (சுன்னத்) இலவசமாகவும் செய்யப்பட்டது.









