நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 105வது இரத்ததான முகாம் தஞ்சை மாவட்டம் கண்டியூர், முஹம்மத் பந்தர், திருப்பந்துருத்தி கிளைகள் சார்பில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கே. ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலை வகித்தார். இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு 71 யூனிட் ரத்தம் தானமாக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.
இம்முகாமில் மாவட்ட செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட துணை செயலாளர் அப்துல்லாஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கண்டியூர் முஹம்மத் பந்தர் திருப்பந்துருத்தி கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.











