82
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி சார்பில் மல்லிப்பட்டிணம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அதனை கட்டுப்படுத்தவும்,பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தரராவ் எடுத்து வருகிறார்.
இதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கொரோனா பாதிப்புகளை கண்டறிய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டனர்.
இந்த முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணைத்தலைவர் மாசிலாமணி, மருத்துவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.