72
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி-யும் பிரபல தொழில் அதிபருமான ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சாதாரண விற்பனையாளராக இருந்து உழைப்பால் வசந்த் அன் கோ என்னும் நிறுவனத்தை தொடங்கி மிகப்பெரிய தொழிலதிபராக உருவாகியவர் வசந்தகுமார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
கொரோனா பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் எம்பி, இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70. எம்பி வசந்தகுமாரின் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.