Home » SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!!

SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தெருமுனை பிரச்சாரம்!!

0 comment

அதிரையில் SDPI கட்சியின் சார்பாக 3அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காலகட்டத்திலும் RSS பாசிச சித்தாந்த அமைப்புகள் இந்திய மக்களுக்கு எதிராக அநீதி இழைத்து வருகின்றனர் இதை கடுமையாக SDPI கட்சி கண்டிக்கிறது.

கோரிக்கைகள்:

புதிய தேசிய கல்விக் கொள்கையை NEP ரத்து செய்யக் கோரியும்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை EIA 2020 கைவிடக் கோரியும்,

கிரிமினல் சட்டங்களில் ஆபத்தான திருத்தங்கள் செய்வதை கைவிடக் கோரியும்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் அதிரை நகர தலைவர் S. அகமது அஸ்லம் அவர்கள் தலைமை வகித்தார் .

கிளை 1 தலைவர் MI. ஜமால் முஹம்மது.BCOM அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

SDPI கட்சியின் நகர இணைச்செயலாளர் C..அஹமது.MSC அவர்கள் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சிறப்புரை ஆற்றினார்.

அடுத்ததாக தக்வா பள்ளி அருகில் நடந்த தெருமுனை பிரச்சாரத்திற்கு

SDPI கட்சியின் நகரச் செயற்குழு உறுப்பினர் ஜர்ஜிஸ் அஹமது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.

கிளை 1 பொருளாளர் இத்ரீஸ் அஹமது நன்றியுரை ஆற்றினார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் அதிரை நகர தலைவர் S. முஹம்மது ஜாவித்.BCOM அவர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் SDPI கட்சியின் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

3 அம்சக் கோரிக்கைகளை அரசு ஏற்று நீதமான முறையில் நீதி வழங்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக அரசுக்கு தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter