தமிழகத்தில் இன்று முதல் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பும் வகையில் அரசு அன்லாக் 4.0 என்பதன் கீழ் தளர்வுகளுடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி என்னென்ன இயங்கலாம், என்னென்ன இயங்கக் கூடாது என்பதை பார்ப்போம்.
தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அன்லாக் 4.0 என்ற பெயரில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளை பார்ப்போம்.
*இ பாஸ் முறை ரத்து. எனினும் மற்ற மாநிலங்களிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வருவோருக்கு இ பாஸ் அவசியம்.
*இரவு 8 மணி வரை தமிழகத்தில் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுகிறது.
*அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கம் மாவட்டத்திற்குள்ளாக இன்று தொடங்கியது
*வணிக வளாகங்கள், பெரிய கடைகள், தொழிற்சாலைகள், ஐடி பூங்காக்கள், தனியார் துறைகள், அரசு அலுவலகங்கள் இன்று முதல் 100 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
*டீக்கடைகள், ரெஸ்டாரென்ட்டுகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கலாம். இரவு 9 மணி வரை பார்சல்கள் பெற அனுமதி அளிக்கப்படுகிறது.
*கிளப்புகள், ஹோட்டல்கள், ரிசார்டுகள், தங்கும் விடுதிகள் உரிய வழிகாட்டும் நெறிமுறைகளுடன் இயங்க அனுமதி
*அனைத்து பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும் திறக்கப்படலாம். எனினும் பார்வையாளர்களுக்கு விளையாட்டு மைதானங்களில் அனுமதி இல்லை.
*ஏற்காடு, நீலகிரி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து இ பாஸ் பெற்றுக் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
*சினிமா படப்பிடிப்புகள் 75 பேருடன் நடத்த அனுமதி
*செப்டம்பர் 15-ஆம் தேதி வரை மாநிலத்துக்குள் குறைந்த அளவிலான ரயில்கள் இயங்க அனுமதி.
*சென்னை விமான நிலையத்தில் ஒரு நாளைக்கு 50 விமானங்கள் வர அனுமதி.
மேற்கண்ட அனுமதிகளுக்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கிருமி நாசினி தெளித்தல், உடல் வெப்பநிலை சோதித்தல் உள்ளிட்ட விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அது போல் 10 வயதுக்குள்பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வர தடை தொடர்கிறது.
எதற்கெல்லாம் அனுமதி கிடையாது ?
*சினிமா தியேட்டர்களுக்கு அனுமதி இல்லை
*ஷாப்பிங் மால்களில் உள்ள மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டர்களுக்கும் அனுமதி இல்லை
*பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை
*10 வயதுக்குள் பட்டவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே வரத் தடை
*கர்ப்பிணிகள், நோய்க்கு சிகிச்சை பெறுபவர்கள், வயதானவர்கள் வணிக வளாகங்கள், பெரிய கடைகளில் பணியமர்த்தக் கூடாது.