148
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. 438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, இன்று (நவம்பர் 22), 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி முதல் கட்ட தேர்தல் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது. தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்குச்சாவடி நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.