அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஹஜ்ரத் ஹாஜா ஷேக் அலாவுதீன் திஸ்தி (ஒலி)அவர்களின்
ஹந்தூரியை முன்னிட்டு
இன்று கடற்கரைத்தெரு தர்கா நிர்வாக கூட்டம் தர்கா வளாகத்தில் நடைபெற்றது. தற்போது நிலவி வரும் கொரோனா நோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு சில தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. அதில் ஊர்வலம், நிகழ்ச்சிகள் , கடைகள் மற்றும் தெரு வசூல் கிடையாது என்றும், 11 நாட்களும் சிறப்பான முறையில் குரான், ஹத்தம் பாத்திஹா ஓதி சிறப்பிக்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் தமிழ்நாடு தர்ஹாக்கள் முன்னேற்றப் பேரவை தலைவர் எஸ்.எஸ். பாக்கர் அலி சாகிப் அவர்களையும் மற்றும் கடற்கரை தெரு ஜமாத்தார்களையும் சந்தித்து இச்சூழ்நிலையை பற்றி விவாதிக்கப்பட்டது. முழுமையான பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் தருவோமென்று கூறியுள்ளார்கள்.
இப்படிக்கு,
தர்ஹா நிர்வாக கமிட்டி, கடற்கரைத்தெரு, அதிராம்பட்டினம்

