நோயற்ற வாழ்விற்கு நமது சுற்றுபுறத் தூய்மை மிக அவசியம் என்று பல்வேறு வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் தொற்று நோய் ஏற்பட முக்கிய காரணமாய் இருப்பது நாம் அன்றாடம் உபயோகித்துவிட்டு தூக்கி வீசும் கழிவு பொருட்கள் என்றால் அது மிகையல்ல.
அதிரையில் கடந்த சில மாதங்களாகவே CMP லேன் பகுதியில் குப்பைகள் நிறைந்து வீதிகளில் சிதறிக் கிடக்கிறது. அவ்வப்போது அதிரையில் மழை பெய்து வருவதால் குப்பைகளில் இருந்து தூர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல மாதங்களாகியும் CMP லேன் பகுதியில் குப்பைகள் அள்ளப்படாததால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அதிரை பேரூராட்சி துரித நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களின் சுகாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




