Home » இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!

இலவச லேப்டாப்பிற்கு பணம் வசூல்! ஆசிரியர்களைச் சிக்கவைத்த மாணவர்கள்!

by
0 comment

விலையில்லா மடிக்கணினிக்கு, எங்கள் ஆசிரியர்கள் 200, 300, 500 என விதவிதமாக விலைவைத்து வசூலித்த பிறகே எங்களுக்குக் கொடுத்தார்கள்” என்று பரபரப்புக் குற்றச்சாட்டை பள்ளி மாணவர்கள் சுமத்துகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்களிடம் பணம் வசூலிப்பதை மொபைல் கேமராவில் போட்டோ எடுத்து, ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகிலுள்ளது முள்ளங்குறிச்சி கிராமம். இங்குள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில்தான் மேற்படி சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்தப் பள்ளியில், கடந்த வருடம் ப்ளஸ் டூ படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது. அதற்கு, ஒவ்வொரு மாணவரிடமும் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதுபற்றிப் பேசிய மாணவர்கள், “எதுக்கு இலவச லேப்டாப்புக்கு பணம் கேக்கறீங்கன்னு நாங்க கேட்டோம். அதுக்கு ஆசிரியர்கள், வண்டி வாடகை கொடுக்கணும்னு சொன்னாங்க. அதுக்கு, ஒரே மாதிரியான தொகை வசூலிக்காம, ஏன் 200, 300, 500 ரூபாய்னு விதவிதமாக வசூல் பண்றீங்கன்னு நாங்க கேட்டோம். அதுக்கு அவங்க, லேப்டாப் வேணும்னா பணம் கொடுத்துட்டு வாங்கிட்டுப் போங்கன்னு சொல்லிட்டாங்க” என்றார்கள்.
இந்நிலையில், மாணவர்கள் எடுத்த புகைப்பட ஆதாரம் வாட்ஸ்அப் வைரலாகப் பரவ, தகவல் அறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி செந்தில்வேல் முருகன், அந்தப் பள்ளியில் நேற்று ஆய்வுசெய்தார். பிறகு பத்திரிகையாளர்களிடம், “துறைரீதியான விசாரணை நடத்திவருகிறோம். தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவது உறுதி” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter