அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை முன்னிட்டு SILVER JUBILEE வெள்ளி விழா கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 25 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் துவக்க விழா இன்று கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் மாலை நடைபெற்றது.
இதில் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாத்தார்கள், அதிரை கிரிக்கெட் அணிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் ABCC அணியின் முன்னாள் வீரர்கள் பங்கேற்றனர். மேலும் ABCC அணியின் முன்னாள் வீரர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
25 ஆண்டுகள் நிறைவு செய்த ABCC அணிக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.