அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று (10.09.2020) வியாழக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.
முன்னதாக தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி இமாம் மௌலானா இப்ராஹிம் கிராத் ஓதிய பின், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தஞ்சை மற்றும் திருவாரூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட தலைவர் A. ஹாஜா அலாவுதீன் ஏற்றினார்.
இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அதிரை அலுவலகத்தை அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைவர் M.S.M. அபுபக்கர் திறந்து வைத்தார்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் திருச்சி மண்டல செயலாளர் S.ரஷீத் அஹ்மது , SDPI கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் A.அபூபக்கர் சித்தீக், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் நிர்வாகிகள், ஜமாத்தார்கள், அனைத்து கட்சி மற்றும் இயக்களின் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் என திரளாக கலந்துகொண்டு PFI – ன் அலுவலக திறப்பு விழாவை சிறப்பித்தனர்.






