அதிரை பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின்விளக்கு எரியாததன் காரணமாக இன்று இரவு நேரடியாக நிருபர்கள் குழுவோடு சென்றது அதிரை எக்ஸ்பிரஸ்.
கடந்த ஒரு மாத காலமாக சரிவர மின்விளக்கு எரியாததன் காரணமாக பொதுமக்கள் அதிரை எக்ஸ்பிரஸிற்கு கோரிக்கை வைத்தனர் இதனடிப்படையில் செய்தி வெளியிடப்பட்டது.அதனுடைய எதிரொலியாக அடுத்த நாளே போடப்பட்டரிந்த ஆறு விளக்குகளில் மூன்று எரியத் தொடங்கியது.நாளடைவில் ஒன்று மட்டுமே எரிந்தது.
அதற்கு பிறகு உயர் கோபுர மின்விளக்குகள் எரிவதில்லை.இதன் காரணமாக இருண்ட நிலைக்கே திரும்பியது அதிரை பேருந்து நிலையம்.சமூக அக்கறையுடன்,பொதுநல சிந்தனையுடன் இன்று மக்களை சந்தித்தோம் அவர்களும் தங்களுடைய ஆதங்கங்களையும்,தேவைகளையும் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்.இதனை நேரடியாக அதிரை எக்ஸ்பிரேஸ் (22-11-2017) புதன்கிழமை இரவு நேரலை ஒளிபரப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இனிவரக் கூடிய காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இன்னல்களை அரசாங்கங்களிடம் கொண்டு சேர்க்கும் இணைப்பு பாலமாக இன்னும் வேகத்துடன் பயணிக்கும் என்பதை இதன் மூலம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களது YOUTUBE சேனலை SUBSCRIBE செய்ய adirai xpress channel என்று type செய்து SUBSCRIBE செய்யுங்கள்.