Home » அமமுக பொருளாளர்வெற்றிவேல்_மரணம் மு. தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!!

அமமுக பொருளாளர்வெற்றிவேல்_மரணம் மு. தமிமுன் அன்சாரி MLA இரங்கல்!!

0 comment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் கொரோனா தொற்று கிசிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையடைந்தோம்.

சட்டமன்றத்தில் எங்களோடு துடிப்பாக செயல்பட்ட அவர், அரசியல் மாற்றங்களில் தனது பதவியை இழந்து எங்களோடு தொடர்ந்து பயணிக்க முடியாமல் போனார்.

ஒரு முறை சட்டமன்றத்தில் அவருக்கும், எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது நான் எழுந்து சென்று, இரு தரப்புக்கு இடையே மோதல் நிகழாத வண்ணம் நிலைமையை சீராக்கினேன்.

அந்த நிகழ்வுக்கு பிறகு அவர் நெருங்கிய நண்பரானார்.

அவர் அமமுகவின் பொருளாளராக பணியேற்று அக்கட்சியின் வளர்ச்சியில் முழு வீச்சில் ஈடுபட்டு வந்தார்.

துணிச்சல் மற்றும் செயல்திறன் மிக்க அரசியல்வாதியாக அறியப்பட்டார்.

தற்போது கொரோனா தொற்று காரணமாக அவர் பெற்று வந்த கிசிச்சை பலனின்றி, இறந்திருப்பது துயரத்திற்குரியதாகும்.

நீண்ட காலம் அரசியலில் பணியாற்றிட வேண்டியவரின் பயணத்தில் கொரோனா நோய் முற்றுப்புள்ளியாய் விழுந்தது வருத்தமளிக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அண்ணன் TTV. தினகரன் உள்ளிட்ட அமமுக வினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter