Thursday, September 19, 2024

அமித்ஷாவிற்கு இந்தியே தெரியாது, அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் பொளேர்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியில் இரங்கல் கடிதம் எழுதி இருந்த நிலையில், . இதற்கு அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன் கண்டித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். முதல்வரின் தாயார் மறைவுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முதல்வரின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கடிதம் அனுப்பி இருந்தார். ஆனால் அவரின் இரங்கல் கடிதம் இந்தியில் இருந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையானது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக அமைப்பு செயலாளராகவும் செய்தி தொடர்பாளருமான பொன்னையன் இந்த பிரச்னை குறித்து பேசும் போது, “அமித்ஷாவின் தாய்மொழி இந்தி இல்லை. இருப்பினும் அவர் இந்தியில் கடிதம் எழுதுகிறார் என்றால், இந்தி திணிப்பில் மத்திய அரசு எவ்வளவு வெறித்தனமாக இருக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு” என்றார்..
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக பகிரங்கமாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்துள்ள இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அமைச்சர் கே.என்.நேருவுடன் S.H.அஸ்லம் சந்திப்பு..!!

அதிராம்பட்டினம் நகராட்சியின் 2வது வார்டு கவுன்சிலராக மேற்கு நகர திமுக பொறுப்பாளரும் முன்னாள் சேர்மனுமான S.H.அஸ்லத்தின் மனைவி சித்தி ஆயிஷா இருந்து வருகிறார்....

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர்...

அதிரை நகராட்சியில் தொடரும் விதிமீறல் :மூடி மறைக்கப்பட்ட டெண்டர் நிறுத்திவைப்பு.

அதிராம்பட்டினம் நகராட்சியில் விதிமுறைகளுக்கு மாறாக டெண்டர் மற்றும் மக்கள் பணிகள் குறித்து பொது மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக கிழக்கு மேற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img