அதிரை நகரில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா தொழிலால் இளைஞர்கள் பெறிதும் அடிமையாகி வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் செய்வதறியாமல் திண்டாடி நிற்பதை காணமுடிகிறது.
அதிராம்பட்டினத்தின் உப்புவரி என்ற தமிழ் சொல்லுக்கு நிகரான ஆங்கில அர்த்தம் கொண்ட பகுதியில் உள்ள கொல்லையில் இளைஞர்களின் வாழ்க்கையை கொள்ளையடித்து வருவதாக தெரிய வருகிறது.

காவல் துறையினரின் குடியிருப்பு பகுதியிலேயே இந்த கஞ்சா கொல்லையில் தினந்தோறும் நூற்றுகணக்கான இளைஞர்கள் வந்து செல்வதும் அங்கு கஞ்சா குடி அமோகமாக நடைபெருவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த குறிப்பிட்ட கஞ்சா கொல்லைக்கு தினந்தோறும் நூற்றுகணக்கான இளைஞர்கள் செல்வதும் அங்கு கஞ்சாவுக்கு அடிமையாகி வாழ்க்கையை சீரழிப்பதும் வாடிக்கையாக உள்ளது
அந்த கொல்லையில் கேரம் போன்ற விளையாட்டு சாதனங்கள் இருப்பதால் அதிகளவில் இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு பின்னர் கஞ்சாவுக்கு அடிமையாகி வருவதாக தெரிகிறது.
இது குறித்து காவல்துறையும் முறையான நடவடிக்கை ஏதும் எடுத்ததாக தெரியவில்லை.
பெற்றோர்களின் கவனத்திற்கு : நமது பிள்ளைகளின் தொடர்பு யார் யார்டன் உள்ளன என்பதை கண்டிப்பாக கணகானியுங்கள்.
திய தொடர்புடையவர்களின் நட்பு இருப்பது தெரியவந்தால் அவர்களை அழகிய முறையில் எடுத்தூரைத்து புரிய வையுங்கள். ஆலிம்கள் உலமாக்கள் மூலம் அவர்களுக்கு மார்க்க ரீதியிலான புரிதலை ஏற்படுத்துக.
நல்ல நட்புகளுடன் மட்டுமே அதிமகதிகம் நேரங்க்களை செலவிட அறிவுரை கூறுங்கள்.
நட்புடன் கூடிய அறிவுரையே சாலச்சிறந்த பலனை தரும் எனவே பெற்றோர்கள் இவ்விஷயத்தில் கவனமுடன் செயலாற்றி நமது சமூகத்தையும் சந்ததியையும் கட்டிகாக்க வேண்டுகிறோம்.