மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மறுக்கும் தமிழக ஆளுநரை கண்டித்து SDPI கட்சியினர் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் SJ.ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முகமது புகாரி MBA, மாவட்ட செயலாளர்கள் முகமது ரஹீஸ்,முகமது அஸ்கர் மற்றும் மாவட்ட பொருளாளர் முகமது இத்ரீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
SDPI கட்சியின் தமிழ்மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கவர்னரை கண்டித்து கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் மாநில ஆளுனருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இறுதியாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவரும் கைது செய்யபட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.



