அதிராம்பட்டினத்தில் வசிக்கும் 95% மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்படும் சாலையில் அவலநிலை குறித்து விளக்குகிறது இந்த பதிவு!
மெயின் ரோட்டிலிருந்து கடைத்தெரு , பெரிய ஜும்மா பள்ளி வழியாக மகிழங்கோட்டை செல்லும் பிரதான சாலை, இது மாவட்ட நிர்வாகத்திற்கு உட்பட்டதாகும். இந்த சாலை கடந்த 15 ஆண்டுகளாக புதுப்பிக்கவில்லை இதுகுறித்து பட்டுக்கோடடை BDO அலுவலகத்தில் பலமுறை புகாரளித்தும் பலனில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

குண்டும் குழியுமான இச்சாலையை பயன்படுத்தி அக்கம்பக்கத்து கிராமவாசிகள் பணி நிமித்தமாகவும் விவசாய பொருட்களை விற்பனை செய்வதற்கும் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். குண்டும் குழியுமாக உள்ள இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் ஒரு வித சங்கடத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இப்பாதையில் செல்லும் வாகனங்கள் பழுது ஏற்பட்டு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது.

போஸ்ட்டாபிஸ் அதிகளவில் மருத்துவமனை உள்ளதால் இந்த சாலையை பயன்டுத்திதான் நோயாளிகள் சிகிசைக்கு சென்று வருகின்றனர். கரடு முரடான சாலையாக இருப்பதால் நோயாளிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

கடந்த 15 ஆண்டுகாலமாக இந்த சாலையை கர்ப்பிணிகள் பயன்படுத்தியது கிடையாது…. குறைமாதமாக இருப்பின் கரு களையும் நிலை,நிறைமாத கற்பினியென்றால்… சொல்லவே தேவையில்லை சுக பிரசவம்தான்.
எனவே மாவட்ட நிர்வாகம் பழுதான மெயின் ரோடு – மகிழங்கோட்டை சாலையை புதுப்பித்து தர அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.